News September 24, 2025
குமரி: பள்ளி மாணவர் மயங்கி விழுந்து பலி

தக்கலை சரல்விளையில் வசிக்கும் ஷேக் முகமதுவின் மகன் பயாஸ் அகமது(16). தக்கலை அரசு பள்ளியில் 11.ம் வகுப்பு படிக்கும் இவர் நேற்று (செப்.23) நண்பர்களுடன் வள்ளியாற்றில் குளிக்கச்சென்றார். குளித்த பின்னர் பயாஸ் அகமது ஆற்றங்கரையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகக்கூறினர். கொற்றிக்கோடு போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News September 24, 2025
குமரியில் பட்டாசு கடை உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வருகிற 10.10.2025-ந்தேதிக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள், மனை வரைபடம். கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம். போன்ற விபரங்களை இணைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 24, 2025
குமரி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

குமரி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News September 24, 2025
குமரி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி!

குமரி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <