News September 24, 2025

தென்காசியில் கஞ்சா செடி வளர்த்த நபர்

image

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேதம் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாமிநாதன் என்பவரது மகன் திருமலை குமார் ஆட்டோ ஓட்டுனர். இவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. தென்காசி போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்த பொழுது அவரது வீட்டில் 10 கஞ்சா செடிகள் வளர்ப்பது கண்டறியப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News September 24, 2025

தென்காசி மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம்

image

காவல் துணை ஆணையர் பிரசண்ணகுமார் (பொறுப்பு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (செப்.24) இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 24, 2025

ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

image

ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் மீது மொத்தமுள்ள 15 பேரூராட்சி உறுப்பினர்களில் 12 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கடந்த 10ந்தேதி மனு அளித்தனர். அதன்படி இதற்கான வாக்கெடுப்பு வருகிற அக்.9ந்தேதி காலை 11 மணிக்கு மன்றக்கூடத்தில் நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி அறிவித்துள்ளார்.

News September 24, 2025

தென்காசி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

தென்காசி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!