News September 24, 2025

கடலூர்: அரசு சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்!

image

கடலூர் மாவட்டத்தில் இன்று (செப்.24) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஜி.என் மஹால்; சாத்தப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம்; பரங்கிப்பேட்டை ராமகிருஷ்ணா திருமண மண்டபம்; முத்துகிருஷ்ணாபுரம் ஜெய் ரமேஷ் மண்டபம்; கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளி; கோண்டூர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

Similar News

News September 24, 2025

கடலூர்: கூடுதலாக 31 வாக்குச்சாவடி உருவாக்கம்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் சட்டமன்றத் தொகுதியில் பகுப்பாய்வுக்கு முன் 227 வாக்குச்சாவடி, புதிய வாக்குச்சாவடி மையம் 31, இடம் மற்றும் கட்டட மாற்றம் 2 என பகுப்பாய்வுக்குப் பின்னர் மொத்தம் 258 வாக்குச்சாவடி உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார்.

News September 24, 2025

கடலூர்: பெற்றோருக்கு பயந்து இளம்பெண் தற்கொலை

image

கடலூர், முதுநகர் அன்னவல்லியைச் சேர்ந்தவர் பிரபாவதி (25). இவர் தனது தோழிகளுடன் திருப்பதி சென்று விட்டு நேற்று சொந்த ஊர் திரும்பினார். அப்போது வரும் வழியில் தனது ஒரு பவுன் நகை மற்றும் செல்போனை தொலைத்து விட்டதால் பெற்றோர் திட்டுவார்கள் என பயந்த பிரபாவதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 24, 2025

கடலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

image

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TNSMART என்ற இணையதளத்தின்<<>> மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் இதனை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!