News September 24, 2025
சாதித்த அரக்கோணம் இயக்குனர்

அரக்கோணத்தைச் சேர்ந்த இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம், கனடா சர்வதேசத் தமிழ் திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. மேலும், இப்படத்தில் நடித்த நடிகர் சாந்தனு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன் போன்றோரும் நடித்திருந்தனர். ஷேர்!
Similar News
News September 24, 2025
ராணிப்பேட்டை: கேக் சாப்பிட்ட சிறுவன் பலி! அதிர்ச்சி சம்பவம்

ராணிப்பேட்டை மாவட்டம் தாமரைபாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் மிதுன். காவனூர் தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று மதியம் பள்ளியில் மதிய இடைவேளையின் போது கேக் சாப்பிட்டுள்ளார். அதன்பின் திடீரென சிறுவன் முகம் வீங்கி மயக்கமடைந்தார். சிறுவனை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
News September 24, 2025
ராணிப்பேட்டை: வருகிறது தீபாவளி! உஷாரா இருங்க…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் செயலிகள் மூலம் வரும் தள்ளுபடி இணைப்புகளை நம்பி பணபரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த இணைப்புகள் பெரும்பாலும் மோசடி கும்பலால் அனுப்பப்படுபவை. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், இது போன்ற மோசடி தொடர்பாக புகார் அளிக்க 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News September 24, 2025
ராணிப்பேட்டை: வங்கி அதிகாரி ஆக விருப்பமா? ரூ.80,000 சம்பளம்!

ராணிப்பேட்டை மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், இங்கு <