News September 24, 2025
2K சிம்ரன் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

GBU-ல் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடி, 2K சிம்ரன் என ரசிகர்களிடம் பெயர் பெற்றவர் பிரியா பிரகாஷ் வாரியர். ஒற்றை பாடலில் தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்ற இவர், சமீபத்தில் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இவர் கழுத்தில் பச்சை குத்தியிருக்கும் ‘carpe diem’ வார்த்தைக்கு இன்றைய நாளை அனுபவியுங்கள் என அர்த்தம். கோலிவுட்டில் சீக்கிரம் படம் கமிட் பண்ணுங்க 2K சிம்ரன்..
Similar News
News September 24, 2025
மத்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்

தரகர்கள் எல்லாம் தலைவர்களாகி விட்டதால் நாட்டில் இஷ்டத்திற்கு வரி விதிக்கப்படுவதாக சீமான் சாடியுள்ளார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்களின் சுமை குறையும் என்கிறார்கள். ஆனால் தொடக்கத்தில் இந்த வரியை விதித்தது யார்? ஜிஎஸ்டி வரி மக்களுக்கு சுமையாக இருந்ததை இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். அப்படியென்றால் மத்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
News September 24, 2025
டிரம்ப்பின் அறிவிப்பை ஆதரிக்கும் USA நிறுவனங்கள்

H-1B விசா கட்டண உயர்வு குடியேற்றத்தை நெறிப்படுத்துவதற்கான முயற்சி என Nvidia, OpenAI நிறுவனங்கள் ஆதரித்துள்ளன. அதேசமயம், தேசத்தின் வளர்ச்சிக்கு திறன்மிக்க ஊழியர்களின் குடியேற்றம் அவசியம் எனவும், இத்தகைய குடியேற்றத்தால் தான் USA-ன் அடித்தளம் போடப்பட்டுள்ளதாகவும் Nvidia CEO ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார். அதேபோல், திறமை மிகு ஊழியர்களை தக்கவைப்பது அவசியம் என OpenAI CEO சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
News September 24, 2025
BREAKING: மீண்டும் கூட்டணியா? முடிவை அறிவித்த டிடிவி

NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய முடிவை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று டிடிவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணாமலை நட்பு ரீதியாக தன்னை சந்தித்தபோது, மீண்டும் கூட்டணியில் இணைய வலியுறுத்தினார். ஆனால், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கக்கூடாது என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளோம்; அதில் எந்த மாற்றமும் இருக்காது என்று உறுதிபட கூறி, கூட்டணி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.