News September 24, 2025
H-1B விசா கட்டணத்தில் டாக்டர்களுக்கு விதிவிலக்கா?

அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. விசா கட்டண உயர்வால் அமெரிக்காவின் மருத்துவத்துறை கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று கருத்துக்கள் எழுந்த நிலையில், இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.
Similar News
News September 24, 2025
காப்பி அடித்த ARR? கோர்ட் கொடுத்த ஆசுவாசம்

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் வரும் ‘வீரா ராஜ வீர’ பாடலில் காப்புரிமையை மீறியதாக, சமீபத்தில் ARR-க்கு ₹2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ARR மேல்முறையீடு செய்த நிலையில், அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனது தந்தையின் ‘சிவ ஸ்துதி’ பாடலை அடிப்படையாக கொண்டே ‘வீரா ராஜ வீர’ பாடல் அமைக்கப்பட்டதாக வசிஃபுதின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 24, 2025
விஜய்யின் உருவ பொம்மையை எரிப்பேன்: வீரலட்சுமி

பரப்புரைக்காக விஜய் திருவள்ளூர் வந்தால், அவரின் உருவ பொம்மையை எரிப்பேன் என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி எச்சரித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு குறித்த சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு விஜய் விளக்கமளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், மருத்துவ உதவி கேட்ட ரசிகைக்கு விஜய் உதவி செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார். எனவே விஜய்க்கு கருப்பு கொடி காட்டப்போவதாக வீரலட்சுமி கூறியுள்ளார்.
News September 24, 2025
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி… காரணம் இதுதான்!

டாஸ்மாக்கில் மது விலை உயர வாய்ப்புள்ளதாக, மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. GST வரி சீர்திருத்தத்தால் பாட்டில்கள், மூடிகள் உள்ளிட்ட பேக்கேஜிங் பொருள்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செலவு உயர வாய்ப்புள்ளதால், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் 551 மது பிராண்டுகளின் சில்லறை விலையை ₹10 வரை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.