News September 24, 2025
மழைநீர் வடிகால் பணிகளில் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் பாதுகாப்பு இல்லாமல் நடைபெறுவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனிப்பட்ட உயிரிழப்பு சம்பவ விவரங்கள் இல்லாமல் பொதுவாக மனு தாக்கல் செய்யப்பட்டதால் விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்தது. அதேசமயம், பணிகள் நடைபெறும் போது பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால் பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தியது.
Similar News
News September 24, 2025
சென்னையில் குறைந்த ஹெல்மெட் பைன்கள்

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் குறந்துள்ளது. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் மீது ஜூன் மாதத்தில் 41,540 வழக்குகளும், ஜூலை மாதத்தில் 39,320 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இது 36,850 ஆகக் குறைந்துள்ளது. தேர்ந்தல் நெருங்கி வருவதால் காவலர்கள் தேர்தல் பணி முறைக்கு மாறி வருவதால் சோதனை குறைந்து விட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
News September 23, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (23.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News September 23, 2025
நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் மோசடி

நடிகர் சூர்யாவின் பாதுகாவலர் அந்தோணி ராஜிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் சூர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த சுலோச்சனா அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்தது அம்பலமானதையடுத்து போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.