News September 24, 2025

பகவதி அம்மன் கோவில் விழாவிற்கு சமயபுரம் யானை

image

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அம்மன் ஊர்வலத்தில் பங்கேற்க சமயபுரம் ஜெயா யானை வருகிறது. அதற்கான ஆணை வனத்துறையினரால் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமயபுரம் கோவிலில் இருந்து ஜெயா யானை கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Similar News

News September 24, 2025

குமரியில் ஓய்வுபெற்ற ஆசிரியையையிடம் ரூ. 4.20 லட்சம் மோசடி

image

தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை சேர்ந்தவர் மேரிலீலா (65), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் ஒரு சொத்தை விலைக்கு வாங்கினார். அப்போது இடைதரகராக செயல்பட்ட விஜயகுமார் என்பவர் சொத்தின் விலையை விடஅதிகமாகரூ.4.20 லட்சம் வாங்கி மோசடி செய்துள்ளார். இதனை அறிந்த மேரிலீலா அந்த பணத்தை விஜயகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. இது பற்றி தக்கலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்

News September 24, 2025

நெல் கொள் முதல் நிலையங்களில் தொலைபேசி எண்கள்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கான வசதியை செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் விற்பனை செய்ய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இந்த எண்களில் தொடர்பு கொண்டு நெல் விவசாயிகள் விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

நெல் கொள்முதல் குடோனில் கலெக்டர் ஆய்வு செய்தார்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று நாகர்கோவில் அருகே உள்ள குருந்தன்கோடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது போதிய அளவு இருப்பு உள்ளதா பாதுகாக்கப்பட்டு வரும் நெல்களின் தரம் சிறந்ததாக உள்ளதா மேலும் ஸ்டாக் வைக் போதிய இருப்பிட வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!