News September 24, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரத்தில் நேற்று (செ.23) இரவு முதல் இன்று (செ.24) காலை 6 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டம் காவல் நிலையங்களின் ரோந்து பார்க்கும் அதிகாரிகள் விவரம் வெளியாகி உள்ளது. பொதுமக்களின் எளிய தொடர்புக்காக காவல் நிலையம் வாரியாக வெளியிடப்படுகிறது. அவசர நிலைகளில் தொடர்பு கொள்ள கீழ்க்காணும் காவல் நிலைய எண்களை பயன்படுத்தலாம். பாதுகாப்பை உறுதி செய்ய, மக்கள் நேர்மையான ஒத்துழைப்பும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஷேர் IT
Similar News
News September 24, 2025
காஞ்சிபுரம்: மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

வெளிநாடு சென்று உயர்கல்வி பயில விரும்பும் சிறுபான்மையின மாணவர்களுக்கு தமிழக அரசு புதிய கல்வி உதவித்திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10 மாணவர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் வரும் அக்டோபர் 31க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
News September 24, 2025
காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காஞ்சிபுரம், தாமால்வார் தெருவில் உள்ள ஏகேபி திருமண மண்டபம், வாலாஜாபாத் மேல்பொடவூர் வீனஸ் ரிசார்ட், மாங்காடு பட்டூர் ரகுமான் மண்டபம், ஸ்ரீபெரும்புதூர், நாவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குன்றத்தூர் நடுவீரப்பட்டு தர்காஸ் சர்ச் மைதானம் ஆகிய இடங்களில் நாளை (செப்டம்பர் 24) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் அனைத்து அரசு சேவைகளையும் நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 24, 2025
காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு துறை சார்பில் வரும் 26ம் தேதி வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதில் 18-35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க