News September 24, 2025
இந்திய வரும் மெஸ்ஸி… ஆஸி., அணியுடன் மோதுகிறார்

நவம்பரில் இந்தியா வரும் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, ஆஸ்திரேலியாவுடன் நட்புறவு போட்டியில் மோதுகிறது. மெஸ்ஸியின் வருகை ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், அர்ஜென்டினா அதிகாரிகள் அடுத்த வாரம் கொச்சி மைதானத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கின்றனர். சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் விளையாடவுள்ள மெஸ்ஸியை வரவேற்க ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு உள்ளனர். Vamos Messi..
Similar News
News September 24, 2025
டி – ஷர்ட்டின் கதை தெரியுமா?

மற்ற ஆடைகளை விட பலருக்கும் சௌகரியமாகவும், ஸ்டெயிலாகவும் இருப்பது டி – ஷர்ட்தான். ஆனால் முதலில் இதை விளையாட்டு வீரர்களுக்காகவே அறிமுகமானது. ஆனால் வெயில் காலத்தில் டி-ஷர்ட் அணிவது நன்றாக இருந்ததால், 1950-களில் இது மக்களின் விருப்ப ஆடையாக மாறியது. டி- ஷர்ட்டில் உள்ள T-க்கு என்ன அர்த்தம் என யோசித்தது உண்டா?
தரையில் அதை விரித்தால் T என்னும் எழுத்தின் தோற்றம் வருவதால் T- Shirt என அழைக்கப்படுகிறது.
News September 24, 2025
விஜய்க்கு அரசியல் தெரியவில்லை: H.ராஜா

விஜய் எதுவும் தெரியாமல் கண்மூடித்தனமாக நீட் தேர்வை எதிர்ப்பதாக H.ராஜா குற்றம்சாட்டினார். விஜய்க்கு சரியான அரசியல் புரிதலும் இல்லை, சட்டமும் தெரியவில்லை என தெரிவித்த அவர் கச்சத்தீவின் ABCD விஜய்க்கு தெரியுமா எனவும் கேள்வி எழுப்பினார். கச்சத்தீவை தாரைவார்த்ததே காங்கிரஸ்தான் எனவும், இந்த அரசியலையெல்லாம் அவர் படித்துவிட்டு பின்பு களத்திற்கு வரவேண்டும் என்றும் H.ராஜா கூறியுள்ளார்.
News September 24, 2025
வரலாற்றில் இன்று

*1950 – கிரிக்கெட் வீரர் மொகிந்தர் அமர்நாத் பிறந்த தினம்
*1996 – ஐ.நா.வின் அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாட்டில் 71 நாடுகள் கையெழுத்திட்டன
*2007 – T20 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற நாள்
*2014 – மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது
*2015 – சவூதி அரேபியா ஹஜ் பயண கூட்டத்தில் சிக்கி 1,100 பேர் உயிரிழந்தனர்