News September 24, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.23) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே  தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News September 24, 2025

புதுகையில் கல்வி கடன் முகாம் அறிவிப்பு

image

புதுகை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் (செப்.24) காலை 10 மணி முதல் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கிகள் சார்பாக மாணவ மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மேற்படிப்பு மேற்கொள்ள தயாராக இருக்கும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களை வழங்கி உடனடியாக கல்விக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News September 24, 2025

மீமிசலில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

image

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடல் பகுதி அருகே (செப்டம்பர் 23) ஆந்திரா பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காரில் கஞ்சாவை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த ஆன்ட்ரூஸ் (27), பிரித்தோ பிரபாகரன் (29) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 23, 2025

கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த கோட்டாட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேலப்பட்டு பகுதியில் அறந்தாங்கி கோட்டாட்சியர் அபிநயா அரசு பணிக்காக செல்லும்போது எதிரே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. உடனே அறந்தாங்கி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!