News September 24, 2025

திருவள்ளூர்: 12 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணை

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப். 23) நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற 12 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பிரதாப் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராஜன் , வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Similar News

News September 24, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News September 24, 2025

பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

image

நசரத்பேட்டை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களால் ஏற்படும் தீமைகள், சைபர் குற்றங்கள், வரதட்சணை கொடுமைகள், துன்புறுத்தல்கள், தாக்குதல்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், அவசர உதவி எண்களான 1098, 1091, 180, 1930 மற்றும் காவலன் SOS செயலி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

News September 23, 2025

திருவள்ளூர்: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து, செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!