News September 24, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஜூலை 23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 24, 2025
நெல்லை: கலெக்டர் போல் பேசி பணம் பறிக்க முயன்ற கும்பல்

பெருமாள் புரத்தைச் சேர்ந்த டாக்டர் வினோத்குமார் பிலிப் என்பவரின் செல்போனுக்கு கடந்த 10ம் தேதி நெல்லை கலெக்டர் பேசுகிறேன். உங்கள் மருத்துவமனை பிரச்சனை தீர வேண்டும் எனில் பணம் கொடுக்க வேண்டும் என கூறி மிரட்டியுள்ளார். பின்னர் இணைப்பை துண்டித்து விட்டார். அந்த எண்ணை டாக்டர் மீண்டும் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யபட்டு இருந்தது இது குறித்து மாநகர காவல் ஆணையரிடம் டாக்டர் புகார் அளித்தார்.
News September 24, 2025
நெல்லை: தெரு நாய் பிரச்சனை – மேயர் முக்கிய தகவல்

திருநெல்வேலி மாநகரில் தெருநாய்கள் பிரச்சனையை கட்டுப்படுத்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. நாய்களை பிடித்து அறுவை சிகிச்சைக்கு பின் அதே இடத்தில் விடும் பணியும் நடக்கிறது. தெரு நாய்கள் மற்றும் வெறிநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரபடுத்தப்படும் என்றார்.
News September 24, 2025
நெல்லை: நெட்டீசன்களுக்கு எஸ்பி எச்சரிக்கை

நெல்லை எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.