News September 23, 2025
லெஜண்ட் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்!

80s, 90sகளில் கிரிக்கெட் வீரர்கள் அளவுக்கு ரசிகர்களை ஈர்த்தவர் இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் டிக்கி பேர்ட். வீரராக ஜொலிக்க முடியவில்லை என்றாலும் கிரிக்கெட் மீதான காதலால், 66 டெஸ்ட், 69 ODI, 3 உலக கோப்பை பைனல் போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். 1996-ல் இவர் கடைசியாக அம்பயரிங் செய்த லார்ட்ஸ் டெஸ்டில் தான் டிராவிட், கங்குலி அறிமுகமானார்கள். இவரது மறைவு கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.RIP
Similar News
News September 24, 2025
சருமத்தை பராமரிக்க இந்த 3 மட்டும் போதும்!

நம் உடலில் உள்ள தோலைவிட, முகத்தில் உள்ள தோல் மிகவும் மென்மையானதாக இருக்கும். சரும பராமரிப்பு பொருள்களை அதிகம் பயன்படுத்தினால் அது பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சருமம் பராமரிக்க இந்த 3 விஷயங்களை செய்தால் போதும். அதவாது, * மென்மையான கிலென்சர் (முகத்தை சுத்தப்படுத்த உதவும்), *மாய்ஸ்டரைசர் (முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்), *சன்ஸ்கிரீன் (குறைந்தபட்சம் எஸ்பிஎஃப் 30 சன்ஸ்கிரீன் போதுமானது).
News September 24, 2025
சூடுபிடித்துள்ள கார் விற்பனை

GST வரி குறைப்பால் 1500CC-க்கும் குறைவான கார்களின் விலை ஒரு லட்சம் வரை குறைந்துள்ளது. இதனால் கார் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வரி குறைப்பு அமலான 22-ம் தேதி மட்டும் டாடா மோட்டர்ஸ் 10,000 கார்களையும், மாருதி சுசுகி 30,000 கார்களையும், ஹுண்டாய் 11,000 விற்று தள்ளியுள்ளது. அதேபோல் கார்களை வாங்க விசாரிப்பவர்களின் எண்ணிக்கையும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
News September 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 468
▶குறள்: ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
▶பொருள்: எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.