News September 23, 2025
பண மழை கொட்ட போகும் 5 ராசிகள்

அக்.18-ம் தேதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவதால் பின்வரும் ராசியினர் நன்மைகள் பெறுவர்: *மிதுனம்: பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் எச்சரிக்கை தேவை *கன்னி: சொத்து, வருமானம் பெற வாய்ப்பு, முதலீடு பலன் தரும் *விருச்சிகம்: நீண்ட காத்திருப்புக்கு பலன் கிடைக்கும், லாபம் அதிகரிக்கும் *மகரம்: பணம் சம்பாதிக்க சூழ்நிலை சாதகமாகும் *மீனம்: நீண்டகால சிக்கல்கள் தீரும், வெற்றி கிடைக்கும்.
Similar News
News September 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 468
▶குறள்: ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
▶பொருள்: எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.
News September 24, 2025
பெண் ஜனாதிபதிகளிடம் விருது பெற்றது பெருமை: ஊர்வசி

‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இது ஊர்வசி வாங்கும் 2-வது தேசிய விருது. 2 தேசிய விருதுகளையும் பெண் ஜனாதிபதிகளிடம் பெற்றது பெருமையாக நினைக்கிறேன் என விருதை பெற்ற பின் ஊர்வசி தெரிவித்துள்ளார். பிரதீபா பாட்டீல் மற்றும் திரவுபதி முர்மு ஆகியோர் கைகளால் விருதுகளை ஊர்வசி வாங்கியுள்ளார்.
News September 24, 2025
USA கிரிக்கெட் சங்கத்தை இடைநீக்கம் செய்தது ICC

அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசியின் சட்ட திட்டங்களை மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக முறையான நிர்வாகம் அமைக்கவில்லை, ஒலிம்பிக் அங்கீகாரம் பெறவில்லை, விதிகளை மீறிய செயல்பாடுகள் உள்ளிட்டவையை காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஐசிசி போட்டிகளில் அமெரிக்காவால் பங்கேற்க முடியாது.