News April 13, 2024
₹1,000 வாங்கி ஏமாற வேண்டாம்

தேர்தல் நேரத்தில் திமுக, அதிமுக வாக்குக்கு தரும் ₹500, ₹1000 வாங்கிக் கொண்டு ஏமாற வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், இபிஎஸ் தலைமையிலான அதிமுக கூட்டணியில் தேசிய கட்சிகள் இல்லை என்பதால், அதிமுகவுக்கு உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்றார். பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டுவரப்படும் எனவும் கூறினார்.
Similar News
News January 25, 2026
ஈரோட்டில் உச்ச கட்ட பாதுகாப்பு!

நாட்டின் 77-வது குடியரசு தின விழா நாளை (ஜன.26) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஈரோடு ரயில் நிலையத்தில் காவல்துறையினர் நேற்று முதல் தீவிர பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் பைகள் மற்றும் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டன.
News January 25, 2026
தேர்தலில் தவெக தனித்து போட்டியா? KAS சூசகம்

திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணியை கிட்டத்தட்ட இறுதிசெய்துள்ள நிலையில், இன்னும் தவெக தரப்பில் கூட்டணி முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்று தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தவெகவில் இரண்டு லட்சம் பேருக்கு பதவி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தவெக தனித்தே களம் காணும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News January 25, 2026
தமிழகத்தில் ஹிந்திக்கு இடமில்லை: CM ஸ்டாலின்

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், ஹிந்தியை திணித்த ஒவ்வொரு முறையும் வீரியத்துடன் போராடி தமிழுக்காக உயிரைவிட்ட தியாகிகளை நன்றியோடு வணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது என்றும் தெரிவித்துள்ளார்.


