News September 23, 2025

ஆட்சியர் தலைமையில் சுகாதார பேரவை கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (செப்.23) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர்கள் மற்றும் மருத்துவ மற்றும் ஊரகப்பணியாளர்கள் சுகாதாரத்துறை, அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News

News September 24, 2025

மாணவர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் வழிகாட்டுதலின் படி, மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக 23.09.2025 அன்று திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையம் (TAF) சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

News September 23, 2025

திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து பணி

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் விடியற்காலை வரை காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இந்த ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம்.

News September 23, 2025

ரேஷன் கடையை பூட்டிச்சென்ற அதிகாரிகள்

image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட ஒரு நியாய விலைக் கடையை அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் திறக்க இருந்தார். ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள், தாங்களே கடையைத் திறக்க வேண்டும் என்று மாறி மாறி முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அதிகாரிகள் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றனர்.

error: Content is protected !!