News September 23, 2025
அரசு மருத்துவமனையில் 2 செவிலியர்கள் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி 27 கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, ஊசி போட்ட சிறிது நேரத்தில் காய்ச்சல் மற்றும் உடல் நடுக்கம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவர்கள் மாற்று சிகிச்சை அளித்ததும் உடல் சீராகினர். இந்த விவகாரத்தில் அன்று பணியிலிருந்து இரண்டு செவிலியர்களை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
மயிலாடுதுறையில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பனியில் ஈடுபட உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில், ரொந்து பனியில் ஈடுபட உள்ள போலீசாரின் நேரடி தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கலாம்.
News September 24, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(செப்.23) இரவு 10 மணி முதல் நாளை(செப்.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டம் தரங்கம்பாடி வட்ட அலுவலகத்தில் எதிர்வரும் (24.9.2025) அன்று நடைபெறுவதாக இருந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல், தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தரங்கம்பாடி வருவாய் வட்டாட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.