News September 23, 2025

சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

image

நவராத்திரி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக கோவை-சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது சேலம் ரயில்வே கோட்டம். அதன்படி, வரும் செப்.28 முதல் அக்.12 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும். முன்பதிவு நாளை (செப்.24) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Similar News

News September 24, 2025

சேலம்: மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மிதவேகத்தில் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News September 24, 2025

சேலம் செப்டம்பர் 24 நாளை முகம் நடைபெறும் இடங்கள்

image

சேலம் செப்டம்பர் 24 நாளை அரசு குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் இடங்கள்
♦️ கொண்டப்பநாயக்கன்பட்டி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம்
♦️ இடைப்பாடி நகராட்சி அலுவலகம் வெள்ளாண்டி வலசு ♦️பி என் பட்டி பேரூராட்சி அலுவலகம் பிஎன்பட்டி
♦️ ஓமலூர் சமுதாயக்கூடம் பல்பாக்கி ♦️வீரபாண்டி ஏ எம் சி வளர்மதி மண்டபம் மாரமங்கலத்துப்பட்டி ♦️வாழப்பாடி அலமேலு அப்பாவு திருமண மண்டபம் சேஷன்சாவடி

News September 23, 2025

அங்கீகரிக்கப்படாத கட்சிகள் நேரில் ஆஜராக உத்தரவு!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத தேசிய மக்கள் கழகம் உள்பட 2 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் அறிவிப்பில் குறிப்பிட்ட தேதியில் தலைமைத் தேர்தல் அலுவலர், தலைமைச் செயலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உரிய ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!