News September 23, 2025
உலக விஞ்ஞானி பட்டியலில் சென்னை நபர்

மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் வி.மோகன், ஸ்டான்ஃபோர்ட்/எல்சேவியர் 2025 உலக விஞ்ஞானிகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மருத்துவம்/நாளமில்லா சுரப்பியியல் & வளர்சிதை மாற்றம் பிரிவில் இந்திய தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். உலகளவில் 3,087வது இடம் பெற்றுள்ளார். இந்திய Top 10-ல் அனூப் மிஸ்ரா, சி.எஸ்.யாஜ்னிக், ஏ.ராமச்சந்திரன், விஜய் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உள்ளனர்.
Similar News
News September 23, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (23.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News September 23, 2025
நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் மோசடி

நடிகர் சூர்யாவின் பாதுகாவலர் அந்தோணி ராஜிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் சூர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த சுலோச்சனா அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்தது அம்பலமானதையடுத்து போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
News September 23, 2025
சென்னை: பட்டாசு கடை அமைக்க இடம் ஒதுக்கீடு

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஒரு வாரத்தில் இடம் ஒதுக்கப்படும் என சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள தெருக்களில் பட்டாசு விற்பனை செய்தவர்களுக்கு தனி இடம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் பதிலை ஏற்று வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.