News September 23, 2025
BREAKING நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய விஏஓ

கூடங்குளத்தைச் சேர்ந்த விஜயா என்பவர் தனக்கு பாத்தியப்பட்ட 1 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக மனு செய்தார். பின்னர் விஏஓவிடம் பட்டா மாறுதல் சம்பந்தமாக விவரம் கேட்ட பொழுது ரூ.25,000 லஞ்சம் வழங்கும்படி கூறியுள்ளார். இதனால் அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் மனு அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் அறிவுரைப்படி விஜயா, விஏஓ ஸ்டாலின் ஜெயசீலனிடம் பணத்தை கொடுக்கும் பொழுது போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 23, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.23] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News September 23, 2025
2,115 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிப்பு – நெல்லை எஸ்.பி

போலீஸ் எஸ் பி சிலம்பரசன் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையினால், இதுவரை மாவட்டத்தில் உள்ள 313 கிராமங்களில், மொத்தம் 2,115 இடங்களில் உள்ள சாதி அடையாளங்கள் வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
நெல்லை: அரசு மருத்துவமனை-ல பிரச்சனையா..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா மதுரை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0462-2573129 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.