News April 13, 2024

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 115 அடியாக குறைந்தது

image

முல்லைப்பெரியாறு அணையில் ஜன.17ல் நீர்மட்டம் அதிகபட்சமாக 139 அடியை எட்டியது. அதன் பின் கடந்த 3 மாதங்களாக மழையின்றி நீர்பிடிப்பு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்வரத்து குறைந்தது. இன்று (ஏப்.13) காலை 6 மணி நிலவரப்படி 115.20 அடியாக உள்ளது. தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 105 கன அடி நீர் குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக திறக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 20, 2025

தேனி: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

image

தேனி மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2025 ஆகும், தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.24,050 – ரூ.64480/- வரை சம்பளம் வழங்கப்படும். SHARE பண்ணுங்க.

News August 20, 2025

தேனி: கல்வி உதவி தொகை வேண்டுமா.. க்ளிக் செய்ங்க

image

தேனி கோட்ட தபால்துறை சார்பில் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற பெயரில் தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தபால்தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ அல்லது தபால்தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருத்தல் அவசியம். விண்ணப்பம், விவரங்களுக்கு<> இங்கே க்ளிக்<<>> செய்யவும்.மற்றவர்களுக்கும் SHARE செய்ங்க.

News August 20, 2025

தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் ஆக.22 அன்று காலை காலை 10.00 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9894889794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!