News September 23, 2025
Introvert தெரியும், Extrovert தெரியும்.. Otrovert தெரியுமா?

பொதுவாக மக்களை Introvert, Extrovert என்று வகைப்படுத்துவார்கள். தற்போது புது வரவாக ‘Otrovert’ என்ற வகையினரை உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் மக்கள் அதிகமாக கூடும் பார்ட்டிகளுக்கு செல்ல விரும்பினாலும், அங்கு ஒருசிலரிடம் மட்டுமே சகஜமாக இருப்பார்களாம். ஆனால், பழகுபவர்களுடன் நல்ல பிணைப்பும், தன்னிச்சையாக சிந்திக்கும் தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்களாம். இந்த மூன்றில் நீங்க எந்த வகை?
Similar News
News September 23, 2025
நீங்கள் சரியாக தூங்குகிறீர்களா?

உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் அவசியம். எப்போதாவது ஒருமுறை தூக்கத்தை மிஸ் செய்தால் பரவாயில்லை. ஆனால், தொடர்ந்து 3 நாள்கள் சரியாக தூங்கவில்லை எனில் இதயம் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சரியாக தூங்காதவர்கள் உடலில் அழற்சியை உண்டாக்கும் புரதங்கள் அதிகமாகும் அதேநேரம், நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதாம். இளைஞர்களையும் இது பாதிக்குமாம். நீங்க எப்படி?
News September 23, 2025
சபரிமலையில் TN-க்கு நிலம்.. பழனியில் கேரளாவிற்கு நிலம்!

தமிழர்களுக்கு வசதி ஏற்படுத்தி தர, சபரிமலையில் 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதற்கு பழனியில் இடம் கொடுத்தால், சபரிமலையில் கொடுப்பதாக கேரள அரசு கூறியதாகவும், இதற்கு தமிழக அரசும் சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கண்ணகி கோயில் கட்டவும், கோயிலுக்கு செல்லும் வழிப்பாதையை செப்பனிட அனுமதிக்க வேண்டும் என கேரள அரசிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
பண மழை கொட்ட போகும் 5 ராசிகள்

அக்.18-ம் தேதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவதால் பின்வரும் ராசியினர் நன்மைகள் பெறுவர்: *மிதுனம்: பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் எச்சரிக்கை தேவை *கன்னி: சொத்து, வருமானம் பெற வாய்ப்பு, முதலீடு பலன் தரும் *விருச்சிகம்: நீண்ட காத்திருப்புக்கு பலன் கிடைக்கும், லாபம் அதிகரிக்கும் *மகரம்: பணம் சம்பாதிக்க சூழ்நிலை சாதகமாகும் *மீனம்: நீண்டகால சிக்கல்கள் தீரும், வெற்றி கிடைக்கும்.