News September 23, 2025
கடலூர் மக்களே.. இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு!

கடலூர் மக்களே.. மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <
Similar News
News September 23, 2025
பழைய பொருட்கள் விற்பனை; ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் தூய்மை மிஷன் 2.0 இயக்கத்தின் மூலம் பயனற்ற பழைய பொருட்களை சேகரித்தனர். பின் அதனை தரம்பிரித்து மறுசுழற்சிக்காக விற்பனை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (செப்.23) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
News September 23, 2025
கடலூர்: ஏலச்சீட்டில் ரூ.33 லட்சம் மோசடி செய்த பெண்

புதுச்சேரி மாநிலம் ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி ருக்குமணி (57). இவர் கடலூர் உழவர் சந்தையில் வைத்து ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இந்நிலையில் சீட்டு கட்டியவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்காமல் ரூ.33,32,000 மோசடி செய்து விட்டார். இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து மோசடியில் ஈடுபட்ட ருக்குமணியை நேற்று கைது செய்தனர்.
News September 23, 2025
கடலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.9.2025 அன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.