News September 23, 2025
தி.மலை: மின்சாரம் பாய்ந்து பலி

தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் துணை மின் நிலைய ஊழியர் பிரபாகரன், புதுப்பாளையம் கிராமத்தில் புதிய மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்கம்பம் எதிர்பாராதவிதமாக உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இன்று(செப்.23) உயிரிழந்தார். கண்ணமங்கலம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 23, 2025
தி.மலையில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோவிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (செப்.23) இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
News September 23, 2025
தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (செப்:23) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News September 23, 2025
தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் இன்று (23.09.2025) திருவண்ணாமலை மாநகராட்சி, காஞ்சி சாலையில் விஜயபாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு உரிய சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.