News September 23, 2025

தி.மலை: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>>, செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 23, 2025

தி.மலையில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம்

image

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோவிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (செப்.23) இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News September 23, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (செப்:23) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News September 23, 2025

தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் இன்று (23.09.2025) திருவண்ணாமலை மாநகராட்சி, காஞ்சி சாலையில் விஜயபாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு உரிய சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!