News September 23, 2025

கோவை: பெண்களுக்கான தையல் பயிற்சி முகாம்

image

கோவை மக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மைய வகுப்புகள் தொடங்கும் விழா, கணபதியில் இன்று(செப்.23) நடைபெற்றது. இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

Similar News

News September 23, 2025

விதிமீறலில் ஈடுபட்ட டிரைவரின் லைசன்ஸ் 7 நாள் தடை!

image

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற சத்யஸ்ரீ என்ற தனியார் பேருந்து சில தினங்களுக்கு முன் காரமடையில் நெரிசல் காரணமாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் எதிர் திசையில் பேருந்தை டிரைவர் இயக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்யகுமார் தனியார் பேருந்து டிரைவரின் லைசென்ஸ் மீது ஏழு நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டார்.

News September 23, 2025

கோவையில் இலவச AI தொழில்நுட்ப பயிற்சி!

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Artificial Intelligence Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 23, 2025

கோவை: காருக்குள் ஆண் சடலம் மீட்பு!

image

நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(42). இவர் நேற்று முன்தினம் காரமடை பகுதியில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது, அதிக மது போதை காரணமாக காரமடை பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு காருக்குள் உறங்கியுள்ளார். இவருக்கு சர்க்கரை நோயும் இருந்துள்ளது. இந்நிலையில், இவர் இன்று(செப்.23) காரில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

error: Content is protected !!