News September 23, 2025
+2 போதும்.. மத்திய அரசில் ₹21,700 சம்பளத்தில் வேலை!

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ₹21,700- ₹69,100 வரை வழங்கப்படும். இதற்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News September 23, 2025
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா… UPDATE

தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் மாற்றம் வந்ததிலிருந்தே தலைகாட்டாமல் இருந்த அண்ணாமலை, TTV, OPS இணைப்பில் பிஸியாக உள்ளார். இந்நிலையில், தனிக்கட்சி தொடங்கவுள்ளீர்களா என அவரிடம் கேட்டதற்கு, ஆரம்பிக்கும்போது சொல்கிறேன் என பதிலளித்துள்ளார். இது கட்சியின் தேசிய தலைமையிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தேசிய பொறுப்பு அவருக்கு வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வரை எதுவும் வழங்கப்படவில்லை.
News September 23, 2025
சென்னையில் ஷாப்பிங் செய்ய சிறந்த இடங்கள் PHOTOS

சென்னையில் ஷாப்பிங் பிரியர்களுக்கு என்று சில பிரத்யேக வீதிகள் உள்ளன. அவற்றை மேலே, போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. சென்னையை சுற்றிப் பார்க்காதவர்களும், புதிதாக செல்லும் ஷாப்பிங் பிரியர்களும், ஒருமுறையாவது இந்த இடங்களுக்கு சென்று வாங்க. இதில், உங்களுக்கு பிடித்த இடம் எது? விடுபட்ட இடங்கள் இருந்தாலும் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 23, 2025
GST 2.0: விலையை குறைக்கலையா? புகார் செய்ங்க

GST 2.0 அமலான போதிலும், சில இ-காமர்ஸ் நிறுவனங்கள் இன்னும் விலையை குறைக்கவில்லை என மத்திய அரசிடம் புகார்கள் குவிந்து வருகின்றன. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வரும் 30-ம் தேதி அறிக்கை கிடைத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. நீங்களும் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொண்டால் டோல் ஃபிரீ எண்ணான 1915 (அ) www.consumerhelpline.gov.in என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.