News September 23, 2025
சென்னை: கழிவறையில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கஞ்சா வழக்கில் சிறையில் உள்ள நிலையில், அவரின் 3 குழந்தைகளும் பாட்டி அரவணைப்பில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி சதீஷ்குமாரின் இளைய மகனான ஸ்ரீ சாய்( 4), வெஸ்டன் டாய்லெட்டில் அமர்ந்து இருந்த போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 23, 2025
சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் சார்பாக நடைபெற்ற உறுப்பு தான தினம் 2025 நிகழ்ச்சியில், உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்து, உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி உரையாற்றினார்.
News September 23, 2025
டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம்

சென்னையைச் சேர்ந்த விமல்ராஜ் ஜெயச்சந்திரன், லாஸ் வேகாஸில் நடைபெற்ற உலக டென்னிஸ் இ-ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் (WTEC) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். சர்வதேச மெய்நிகர் டென்னிஸ் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இப்போட்டியில் உலகம் முழுவதிலிருந்தும் பங்கேற்ற வீரர்களை வெற்றி கொண்டார். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
News September 23, 2025
உலக விஞ்ஞானி பட்டியலில் சென்னை நபர்

மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் வி.மோகன், ஸ்டான்ஃபோர்ட்/எல்சேவியர் 2025 உலக விஞ்ஞானிகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மருத்துவம்/நாளமில்லா சுரப்பியியல் & வளர்சிதை மாற்றம் பிரிவில் இந்திய தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். உலகளவில் 3,087வது இடம் பெற்றுள்ளார். இந்திய Top 10-ல் அனூப் மிஸ்ரா, சி.எஸ்.யாஜ்னிக், ஏ.ராமச்சந்திரன், விஜய் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உள்ளனர்.