News September 23, 2025
மயிலாடுதுறை: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினர், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து தீண்டாமை நடைபெறாமல் தடுப்பதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News September 23, 2025
மயிலாடுதுறை: இந்தியன் வங்கியில் சூப்பர் வாய்ப்பு!

மயிலாடுதுறை மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <
News September 23, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சி திருமஞ்சன வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்று வருகிறது. முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதை ஆய்வு செய்து முகாமில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். மேலும் இதில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் பங்கேற்றனர்.
News September 23, 2025
மயிலாடுதுறை: வங்கி வாசலில் பைக் திருட்டு

மயிலாடுதுறை மகாராஜபுரம் ஆனந்தகுடியை சேர்ந்த கோமளவல்லி என்பவர் கூறைநாடு பகுதியில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு வங்கிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மொபட்டை திருடிய பிரித்விராஜ் (19), பரசுராமன் (21), சாரதி (20) மகேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.