News September 23, 2025
தி.மலை: 12th போதும், அரசு வேலை!

தி.மலை மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியில் வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். கடைசி தேதி – செப். 23 ஆகும். விவரங்களுக்கு இங்கு <
Similar News
News September 23, 2025
தி.மலை: மின்சாரம் பாய்ந்து பலி

தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் துணை மின் நிலைய ஊழியர் பிரபாகரன், புதுப்பாளையம் கிராமத்தில் புதிய மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்கம்பம் எதிர்பாராதவிதமாக உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இன்று(செப்.23) உயிரிழந்தார். கண்ணமங்கலம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 23, 2025
தி.மலை: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <
News September 23, 2025
தி.மலை: மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு

தி.மலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.