News September 23, 2025

குமரி: அரசு மருத்துவமனை-ல பிரச்சனையா..!

image

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா மதுரை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04652-275089 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

Similar News

News November 15, 2025

குமரி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

image

புத்தேரி நான்கு வழிசாலையில் நேற்று (நவ.14) ஒருவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி வடசேரி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசின் விசாரணையில், அவர் மேல்புறம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த தொழிலாளி கிஷோர்(53) என தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

News November 15, 2025

குமரி: ரயில் மோதி ஒருவர் பலி

image

காவல்கிணறு ரெயில்வே தண்டவாளம் அருகே நவ 13ம் தேதி இரவு ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் விசாரணையில் திருவனந்தபுரம் விதுரா பகுதி லாரி டிரைவர் சரத்ராஜ்(32) என்பது தெரியவந்தது. இவர் காவல்கிணறு பகுதியில் இருந்து காய்கறிகள் ஏற்றிச்செல்ல அடிக்கடி வந்து செல்வாராம். அவ்வாறு வந்தபோது ரெயில் மோதி இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

News November 15, 2025

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கு தேர்வு

image

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கான தேர்வு வருகிற 16ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைவாணர் என்.எஸ்.கே இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் சேவியர் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வுக் கூடங்களில் நடைபெறுகிறது. 310 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!