News September 23, 2025
அரியலூர் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களுடன் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட எஸ் பி விஸ்வேஷ் பா. சாஸ்திரி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 23, 2025
அரியலூர்: இந்தியன் வங்கியில் சூப்பர் வாய்ப்பு!

அரியலூர் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <
News September 23, 2025
அரியலூர்: மின்தடை அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் நடுவலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தத்தனூர் பகுதியில் நாளை (செப்டம்பர் 24) புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. எனவே தத்தனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
News September 23, 2025
அரியலூர்: மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அண்ணாசிலை அருகே அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினர் திங்கள்கிழமை(செப் 22)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலர் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலர் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலர் துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் விஜயகுமார், எச்எம்எஸ் மாவட்டச் செயலர் ராமசுவாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.