News April 13, 2024

ஓடிபி எண் மூலம் பூத் சிலிப் வழங்கும் பாஜக

image

நவீன தொழில்நுட்பம் மூலம் பாஜக பூத் சிலிப் வழங்குவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. திமுக வாக்குச்சாவடி முகவருக்கு வந்த குறுந்தகவலில், இணையதள இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும், அதனை கிளிக் செய்தால் ஓடிபி கேட்பதாகவும், பின் வாக்காளர் எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்தால் பாஜகவின் பூத் சிலிப் வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என குற்றம் சாட்டியுள்ளனர்.

Similar News

News September 8, 2025

சென்னை: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

image

சென்னை மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News September 8, 2025

நாளை வெளியாகப் போகும் ஆப்பிள் ரகசியம்

image

ஆப்பிள் நிறுவனம் நாளை தன் அசத்தலான புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. கலிபோர்னியாவில் நடைபெறும் லாஞ்ச் நிகழ்வில் ஐபோன் 17 சீரீஸ் போன்கள் அறிமுகமாக உள்ளது. இதுதவிர, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஆப்பிள் வாட்ச் SE, ஏர்பாட்ஸ் Pro 3 உள்ளிட்ட தயாரிப்புகளும் அறிமுகமாக உள்ளன. இவற்றின் புதிய அம்சங்கள் குறித்த விஷயங்கள் ரகசியமாகவே உள்ளன. நாளை வரை காத்திருங்கள்.

News September 8, 2025

வெளிநாட்டு பயணம் படுதோல்வி: அன்புமணி

image

CM ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி அடைந்திருப்பதாக அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். ₹15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டதில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் 89% (₹13,815) விரிவாக்கத் திட்டங்களுக்கானவை என்றும், இதனை வெளிநாடு செல்லாமல் தமிழ்நாட்டில் இருந்தே செய்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!