News September 23, 2025

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் வாக்குச்சாவடி நிலைய மறு சீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் .ப.ஆகாஷ் தலைமையில் (செ.22) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 163 நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி, 164 கீழ்வேளூர் தனி சட்டமன்ற தொகுதி மற்றும், 165 வேதாரணியம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 24, 2025

நாகை: போஸ்டரால் பரபரப்பு

image

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நரிக்குட்டை என்று அழைக்கப்படும் சந்திர புஷ்கரணி தீர்த்த குளம் தனியார் வங்கி அருகில் உள்ளது. இந்த குளத்தை சுற்றி தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பக்தர்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் திருமருகல் பகுதிகளில் குளத்தை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News September 24, 2025

நாகை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

நாகை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News September 24, 2025

நாகை: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

image

நாகை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக் <<>>செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை உங்கள் போனில் ஈஸியா பெறலாம். இந்த டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வம் என்பதால், போலீசாரிடமும் லைசன்ஸை, ஆர்.சி புக் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!