News April 13, 2024
மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காவலர்கள் ஆலோசனை

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
Similar News
News December 9, 2025
திருவாரூர்: இயந்திரங்கள் குறித்து பயிற்சி அறிவிப்பு

வேளாண் பொறியியல் துறை வேளாண் கருவிகள் பணிமனையில், இயந்திரங்கள் குறித்த செயல் விளக்க பயிற்சி டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயன்பெற விரும்புவோர் candidate.tnskill.tn.gov.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்து பயன்படலாம், என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
News December 9, 2025
திருவாரூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

திருவாரூர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4 தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <


