News September 23, 2025
BREAKING: கூட்டணிக்கு வர TTV-க்கு அழைப்பு

டிடிவியை சந்தித்தது பேசியது உண்மைதான் என்று அண்ணாமலை சஸ்பென்ஸை உடைத்துள்ளார். திமுகவை வீழ்த்த, மீண்டும் NDA கூட்டணியில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதற்கு, நவம்பர் மாதத்திற்கு பிறகு பார்க்கலாம் என்று தினகரன் பதிலளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை; அவரின் நல்ல பதிலுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்றார்.
Similar News
News September 23, 2025
துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்கள் பறிமுதல்

கொச்சியில் பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். பூட்டான் வழியாக சொகுசு கார்கள் கடத்தி வந்த புகாரில் காலை முதல் நடந்துவந்த சோதனை முடிவில், துல்கர் சல்மானுக்கு சொந்தமான 2 கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் சோதனை தொடர்வதாகவும், பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News September 23, 2025
பெண்களுக்கு ₹2 லட்சம் தரும் அரசு; விண்ணப்பியுங்கள்

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் தொடங்க ₹2 லட்சம் கடன் வழங்குகிறது புதிய ஸ்வர்ணிமா திட்டம். இதனை திருப்பி செலுத்த 3 – 8 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். விண்ணப்பிக்க <
News September 23, 2025
அதிமுகவை வழிநடத்தும் பாஜக: பெ.சண்முகம்

அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும், அனைத்தையும் பாஜகவே வழிநடத்தும் என்று பெ.சண்முகம் (CPIM) விமர்சித்துள்ளார். அதிமுகவில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியாக டெல்லியில் அமித்ஷாவை சந்திக்கின்றனர். பாஜகதான் அதிமுகவை வழிநடத்துகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. மோடியா, லேடியா என்ற ஜெ.,வின் அதிமுக, இன்று அமித்ஷா சொல்படிதான் நடக்கும் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.