News September 23, 2025
BREAKING: தங்கம் விலை புதிய Record… இதுவே முதல்முறை

ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹70 உயர்ந்து ₹10,500-க்கும், சவரன் ₹560 உயர்ந்து ₹84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ₹84 ஆயிரத்தை தொட்டது இதுவே முதல்முறை. கடந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை ₹1,680 அதிகரித்துள்ளது.
Similar News
News September 23, 2025
தவெக தனித்து ஆட்சி அமைக்கும்: அருண்ராஜ்

தவெக 30% வாக்கு வங்கியை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளுக்கு வருவது பணம் கொடுப்பதால் வரும் கூட்டம். ஆனால், விஜய்க்கு வருவது தன்னெழுச்சியான கூட்டம் எனக் கூறிய அவர், தற்போது எடுக்கப்பட்டு வரும் கருத்துக்கணிப்புகள் தவெகவுக்கு சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
News September 23, 2025
விலை குறையலையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

நாடு முழுவதும் GST வரி சீர்த்திருத்தம் அமலுக்கு வந்துள்ளதால் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் விலை குறைந்துள்ளது. இந்நிலையில் நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை என்றால் உங்களால் புகாரளிக்க முடியும். 1800-11-4000 (அ) https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக புகாரளிக்கலாம். முதல்நாளிலேயே 100 புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 23, 2025
ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்: EPS உறுதி

சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், குன்னூரில் EPS பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது குன்னூருக்காக திமுக அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என குற்றம்சாட்டிய அவர், அதிமுகவின் திட்டங்களை பெயர் மாற்றி திமுக புகழ் தேடிக்கொள்கிறது என பேசினார். மேலும், அதிமுக ஆட்சி அமைந்தால் நீலகிரியில் உள்ள வீடில்லாத ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் எனவும் உறுதியளித்தார்.