News September 23, 2025

நாமக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நாமக்கல் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 3, 2025

நாமக்கல்: 10வது படித்தால் அரசு வேலை ரெடி!

image

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 09.11.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News November 3, 2025

நாமக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? இதை பண்ணுங்க!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News November 3, 2025

நாமக்கல் அருகே வாலிபர் பலி!

image

சேலம், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (30). இவர் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பிலிப்பாக்குட்டை பகுதியை சேர்ந்தவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்துவந்தார். இந்த நிலையில் தோட்டத்தில் மருந்து அடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்ற சரவணன் தவறி கிணற்றில் விழுந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சரவணன் உடலை மீட்டனர். ஆயில்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!