News September 23, 2025
அரியலூர்: புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உடையார்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட் டிக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தத்தனூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை (வயது 50), அன்பழகன் (48) ஆகிய 2 பேரும் அவர்களது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
Similar News
News September 23, 2025
அரியலூர்: மின்தடை அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் நடுவலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தத்தனூர் பகுதியில் நாளை (செப்டம்பர் 24) புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. எனவே தத்தனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
News September 23, 2025
அரியலூர்: மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அண்ணாசிலை அருகே அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினர் திங்கள்கிழமை(செப் 22)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலர் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலர் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலர் துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் விஜயகுமார், எச்எம்எஸ் மாவட்டச் செயலர் ராமசுவாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
News September 23, 2025
அரியலூர்: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <