News September 23, 2025
கோவை: பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற இளம்தாய்!

கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று(செப்.22) சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் வந்துள்ளார். அவரது பெயர் சூர்யா என தெரிவித்தார். அவருக்கு பிரசவத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அந்தக் குழந்தையை பிரசவ வார்டிலேயே தவிக்க விட்ட இளம்பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 23, 2025
கோவை: மனைவியைத் தாக்கிய கணவர் கைது!

கோவை: டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவரது கணவர் சுரேஷ். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், அதீத மதுப்பழக்கம் காரணமாக சுரேஷ் தனது மனைவியை சில மாதங்களுக்கு முன் தாக்கியுள்ளார். இப்புகாரின் பேரில் காட்டூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த சில மாதங்களில் சுரேஷ் மீண்டும் பிரியாவை கடுமையாக தாக்கியுள்ளார். இவரை போலீசார் கைது செய்தனர்.
News September 23, 2025
கோவை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

கோவை: திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ 15,000 பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2025-2026ம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம்: www.tamilvalarchithurai.tn.gov.in . கடைசி தேதி: அக்டோபர் 15.
News September 23, 2025
கோவை: வீட்டில் குளித்த மாணவர் பலி!

கோவை: ஆர்.எஸ்.புரம் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பிரதீப் என்பவரது மகன் ஆயுஷ் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். ஆயுஷ் நேற்று(செப்.22) கல்லூரி செல்வதற்காக குளிக்க குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த பிரதீப் உள்ளே சென்று பார்த்த போது ஆயுஷ் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.