News September 23, 2025
விழுப்புரத்தில் மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்தடை என்று மின்சார வாரியத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காரணைபேரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, புதுப்பாளையம் மற்றும் மேலும் பல பகுதிகளில் இன்று மின்தடை இருக்கும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 16, 2025
விழுப்புரத்தில் கனமழை வெளுக்கும்!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாளை (நவ.17) & நவ.18ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட, மாவட்ட ஆட்சியருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணி அலெர்ட் பண்ணுங்க.
News November 16, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 15, 2025
திண்டிவனம் சார் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 72 – திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் வாக்காளர் பதிவு அலுவலர் திரு.லூர்துசாமி உட்பட பலர் உள்ளனர்.


