News September 23, 2025
SPORTS ROUNDUP: சாதனை படைத்த இந்திய ஸ்கேட்டிங் குழு!

*புரோ கபடி லீக்: 39- 22 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது உ.பி. யோதாஸ்.
*இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது.
*ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: இந்தியா 3 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்று, வரலாற்றில் முதல்முறையாக பதக்கப்பட்டியலில் 5-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
Similar News
News September 23, 2025
சார்ஜர்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா?

பெரும்பாலான ஃபோன் கம்பெனிகள் வெள்ளை நிறத்தில் சார்ஜர்களை உருவாக்குகின்றன. இதற்கு பல காரணங்கள் இருக்கிறதாம். கருப்பு நிற சார்ஜர்களை விட வெள்ளை சார்ஜர்கள் பிரீமியமான தோற்றத்தை அளிக்கின்றன. மற்ற நிறங்களை ஒப்பிடும்போது வெள்ளை நிற சார்ஜர்களை குறைந்த செலவில் உருவாக்க முடியுமாம். மேலும், சார்ஜர் வெப்பமாவதை வெள்ளை நிறம் கட்டுப்படுத்தும் என்பதால் பாதுகாப்புக்காக இப்படி தயாரிக்கப்படுகிறது. SHARE.
News September 23, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹1000 உயர்வு

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிராம் வெள்ளி ₹1 அதிகரித்து ₹149-க்கும், கிலோ வெள்ளி ₹1000 அதிகரித்து ₹1,49,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 5 நாள்களில் மட்டும் சுமார் ₹8000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
News September 23, 2025
டெல்லியில் முகாமிட்டுள்ள ராமதாஸ் தரப்பு

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததாக அவருடைய தரப்பு சொல்லிவருகிறது. இந்நிலையில் பாமகவை தங்கள் வசம் கொண்டு வருவதற்கான பணிகளில் ராமதாஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி டெல்லியில் முகாமிட்டுள்ளார். அமித்ஷாவை சந்தித்து, பாமக தலைமை, கூட்டணி குறித்தும் பேசவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அன்புமணி தரப்பு அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.