News September 23, 2025

குறட்டை விடுறீங்களா? இதய பிரச்னையா கூட இருக்கலாம்

image

நாம் சாதாரணமாக நினைக்கும் குறட்டை, இதய ஆரோக்கியத்திற்கான எச்சரிக்கை மணியாக இருக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கத்தின்போது காற்றுப்பாதை அடைபட்டு, சுவாசிக்க முடியாமல் போவதால் குறட்டை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, காலப்போக்கில் இதயம் பாதிப்படையும். இது நீண்ட நாள்களுக்கு தொடர்ந்தால் இதய செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.

Similar News

News September 23, 2025

ரஜினியை குருவாக பார்க்கிறேன்: அண்ணாமலை

image

மாதத்திற்கு ஒரு முறை ரஜினியை சந்திப்பதாகவும், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். ரஜினியை தனது குருவாக பார்ப்பதாக கூறிய அவர், இச்சந்திப்புகளில் அரசியல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், ஆன்மிகத்தை பற்றி தனக்கு பல விஷயங்களை கூறுவார் என்பதால், அவரை ஆரம்பத்திலிருந்தே நட்பு ரீதியாக சந்திப்பது வழக்கம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

சார்ஜர்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா?

image

பெரும்பாலான ஃபோன் கம்பெனிகள் வெள்ளை நிறத்தில் சார்ஜர்களை உருவாக்குகின்றன. இதற்கு பல காரணங்கள் இருக்கிறதாம். கருப்பு நிற சார்ஜர்களை விட வெள்ளை சார்ஜர்கள் பிரீமியமான தோற்றத்தை அளிக்கின்றன. மற்ற நிறங்களை ஒப்பிடும்போது வெள்ளை நிற சார்ஜர்களை குறைந்த செலவில் உருவாக்க முடியுமாம். மேலும், சார்ஜர் வெப்பமாவதை வெள்ளை நிறம் கட்டுப்படுத்தும் என்பதால் பாதுகாப்புக்காக இப்படி தயாரிக்கப்படுகிறது. SHARE.

News September 23, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹1000 உயர்வு

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிராம் வெள்ளி ₹1 அதிகரித்து ₹149-க்கும், கிலோ வெள்ளி ₹1000 அதிகரித்து ₹1,49,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 5 நாள்களில் மட்டும் சுமார் ₹8000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!