News September 23, 2025

நெல்லை: கல்விக் கடன் வேண்டுமா? மிஸ் பன்னாதீங்க

image

நெல்லை மாவட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. நாளை 24 ஆம் தேதி நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றோர் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். தகுதியானவர்களுக்கு கல்வி கடன் வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Similar News

News September 23, 2025

நாய் கடிக்கு 1,706 வெறிநோய் தடுப்பூசி மருந்து

image

நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே நாய் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,706 வெறிநாய் தடுப்பூசி மருந்து குப்பிகள் உள்ளன. மேலும் ரேஸ் குளோபின் 55 குப்பிகள் கையிருப்பில் உள்ளன பொதுமக்கள் வளர்ப்பு நாய் பூனை மற்றும் தெரு நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

நெல்லை மாவட்டத்தில் 9 துணை பிடிஒ மாற்றம்

image

பாளையங்கோட்டை யூனியன் தலைமை இடத்து துணை பிடிஒ ராமலட்சுமி களக்காட்டிற்கு மாற்றப்பட்டார். வள்ளியூர் துணை பிடிஓ ராஜேஸ்வரி ராதாபுரத்திற்கும் இந்தப் பணியில் இருந்த வெங்கடேஷ் வள்ளியூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுபோல் மாவட்ட முழுவதும் மொத்தம் ஒன்பது துணை பிடிஓ அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் சுகுமார் பிறப்பித்துள்ளார்.

News September 23, 2025

மேலப்பாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

image

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி விலக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விழுந்து கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு இன்று ( செப்.23 ) காலை தகவல் கிடைத்தது. தகவல் பெறப்பட்டு பாளையங்கோட்டை தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று பார்க்கையில் அந்த நபர் ஏற்கனவே இறந்து கிடந்தது தெரியவந்தது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!