News September 23, 2025
நவராத்திரியில் சொல்ல வேண்டிய அம்பாள் மந்திரம்!

இந்த மந்திரத்தை சொல்லுவதன் மூலம், 16 வகையான செல்வங்களையும் அம்பிகை அள்ளி கொடுப்பாள் என்பது ஐதீகம்.
‘யாதேவி ஸர்வபூதேஷூ விஷ்ணு மாயேதி ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம’.
பொருள்:
‘எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் விஷ்ணு மாயை உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம்! இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News September 23, 2025
BREAKING: கூட்டணிக்கு வர TTV-க்கு அழைப்பு

டிடிவியை சந்தித்தது பேசியது உண்மைதான் என்று அண்ணாமலை சஸ்பென்ஸை உடைத்துள்ளார். திமுகவை வீழ்த்த, மீண்டும் NDA கூட்டணியில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதற்கு, நவம்பர் மாதத்திற்கு பிறகு பார்க்கலாம் என்று தினகரன் பதிலளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை; அவரின் நல்ல பதிலுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்றார்.
News September 23, 2025
சின்ன பாலம்.. பல உயிர்களுக்கு பெரிய வெற்றி!

சாலையில் குரங்குகளும், அணில்களும் வாகனங்களில் அடிபட்டு, உயிரிழந்து கிடப்பதை பார்த்தாலும், ‘விதி அவ்வளோதான்’ என கடந்து சென்று விடுவோம். ஆனால், விதியை குறைசொல்லாமல், இலங்கையில் இதற்கு தீர்வு கண்டறிந்துள்ளனர். கயிறு பாலங்களை கட்டி, வன விலங்குகள் ரோட்டை கடக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பதிவை பகிர்ந்த தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா சின்ன பாலம் என்றாலும், வன உயிர்களுக்கு பெரிய வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.
News September 23, 2025
தூங்காமல் நான் காணும் சொப்பனமே..

சில்லென்று காற்றாய் வந்து, கனவாய் கலைந்த சில்க் ஸ்மிதாவுக்கு இன்று பிறந்தநாள். நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், அந்தக்கால 80ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல, 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என ஜெனரேஷன் கடந்தும் கனவுக்கன்னியாக இருக்கிறார் சில்க். தென்னிந்தியா சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த காலமும் உண்டு. உங்களுக்கு பிடித்த சில்க் ஸ்மிதா பாட்டு எது? வாழ்த்தை Likes-ஆக கொடுங்க.