News September 23, 2025

MP சுதா மூர்த்தியை மிரட்டிய சைபர் மோசடி கும்பல்

image

இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவியும், MP-யுமான சுதா மூர்த்தியை மோசடி கும்பல் மிரட்டியுள்ளது. கடந்த 5-ம் தேதி தொலைத்தொடர்புத்துறை அதிகாரி என்ற பெயரில் ஒரு நபர் சுதாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சுதா மூர்த்தியின் செல்போன் எண்ணில் இருந்து தவறான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதாக கூறி அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 23, 2025

காஞ்சி: ரயில்வேயில் வேலை! – NO EXAM

image

காஞ்சி மக்களே, தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இதற்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும். இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப்.25க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏதும் இல்லாமல் மத்திய அரசு வேலை பெற செம்ம வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

News September 23, 2025

தூங்காமல் நான் காணும் சொப்பனமே..

image

சில்லென்று காற்றாய் வந்து, கனவாய் கலைந்த சில்க் ஸ்மிதாவுக்கு இன்று பிறந்தநாள். நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், அந்தக்கால 80ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல, 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என ஜெனரேஷன் கடந்தும் கனவுக்கன்னியாக இருக்கிறார் சில்க். தென்னிந்தியா சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த காலமும் உண்டு. உங்களுக்கு பிடித்த சில்க் ஸ்மிதா பாட்டு எது? வாழ்த்தை Likes-ஆக கொடுங்க.

News September 23, 2025

AI-ஆல் பெண்களுக்கு தான் அதிக பாதிப்பா!

image

AI-ஆல் ஆண்களை விட பெண்கள் வேலையிழக்கும் அபாயம் அதிகம் என ஐநா தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்துறையில் பெண்களின் 28% வேலைகளும், ஆண்களின் 21% வேலைகளும் AI-ஆல் செய்யமுடியும். இதற்கு, இத்துறையில் பெண்கள் குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், 2030-க்குள் 34.3 கோடி பெண்கள் பாதிக்கப்படலாம். எனவே, இந்த பாலின பாகுபாடை உடனடியாக சரி செய்ய ஐநா வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!