News September 23, 2025

வீட்டில் உள்ள பெண்கள் என்ன செய்கிறார்கள்?

image

’வீட்டுல சும்மாதான இருக்க, இத செஞ்சிடு’ – இல்லத்தரசிகளிடம் நாம் சர்வசாதாரணமாக சொல்லும் விஷயம் இது. நாம் சொல்வதை போல அவர்கள் ஒருநாள் சும்மா இருந்தா என்னாகும்? பெண்கள் வீடுகளில் செய்யும் வேலைகளை முக்கியமானதாகவே நாம் கருதுவதில்லை. வீட்டிலுள்ள பெண்கள் எவ்வளவு உழைக்கின்றனர் என்பதை மேலே உள்ள படம் உணர்த்துகிறது. பெண்களின் உழைப்பை பாராட்ட ஒரு லைக் போடலாமே. கருத்தையும் கமெண்ட்டில் சொல்லுங்கள்.

Similar News

News September 23, 2025

இந்திய அணியிலிருந்து விலகிய ஷ்ரேயஸ்!

image

இந்திய A அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார். இன்று தொடங்கும், ஆஸ்திரேலிய A அணிக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அவர் அணியிலிருந்தும் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணத்தினால் விலகியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக துருவ் ஜுரெல் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

சமூக வலைதளங்களில் PHOTO-ஐ மாற்றிய பாஜக தலைவர்கள்

image

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார், அண்ணாமலை, வானதி உள்ளிட்டோர் தங்களின் சமூக வலைதளங்களில் முகப்பு பக்கத்தை மாற்றியுள்ளனர். அதில், பாஜக கொடி வண்ணத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒரு மிகப்பெரிய பரிசு, PM மோடி அரசுக்கு நன்றி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அவர்களை தொடர்ந்து, பாஜக தொண்டர்களும் அதே போட்டோவை முகப்பு பக்கத்தில் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

News September 23, 2025

பிரபல நடிகருக்கு 61 வயதில் திருமணம்

image

பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ்(61), தனது நீண்டநாள் காதலியான அலெக்ஸாண்ட்ரா கிராண்ட்(52) என்பவரை திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2019-ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வரும் நிலையில், மீடியா வெளிச்சம் படாமல் குடும்பத்தினர்& நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. கீனு ரீவ்ஸின் Matrix, John Wick படங்கள் இந்தியாவிலும் பெரும் வெற்றி பெற்றன.

error: Content is protected !!