News September 23, 2025
மீண்டும் குடும்பத்தை காப்பாற்ற ஜார்ஜ் குட்டி தயார்

‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் 2 பாகங்களும் வசூலில் பட்டையை கிளப்பியதோடு, மக்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றன. இதை தமிழில் கமல்‘பாபநாசம். என்று ரீமேக் செய்து ஹிட் கொடுத்தார். ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கும் நிலையில் கொச்சியில் ‘த்ரிஷ்யம் 3’ நேற்று நடந்து முடிந்துள்ளது. ஜார்ஜ் குட்டி குடும்பத்தை காப்பாற்றும் அடுத்த அத்தியாயத்தை விரைவில் திரையில் காணலாம்.
Similar News
News September 23, 2025
பிரபல நடிகருக்கு 61 வயதில் திருமணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ்(61), தனது நீண்டநாள் காதலியான அலெக்ஸாண்ட்ரா கிராண்ட்(52) என்பவரை திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2019-ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வரும் நிலையில், மீடியா வெளிச்சம் படாமல் குடும்பத்தினர்& நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. கீனு ரீவ்ஸின் Matrix, John Wick படங்கள் இந்தியாவிலும் பெரும் வெற்றி பெற்றன.
News September 23, 2025
மூலிகை: ஆடாதொடையின் அற்புத மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
➤ஆடாதொடை வேருடன், கண்டங்கத்திரி வேர் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வலிகள் குறையும் ➤ஆடாதொடை இலையின் சாறும், தேனும் கலந்து குடித்து வந்தால் மூச்சு திணறல், இருமல் போன்றவை குணமாகும் ➤மருதம்பட்டை, ஆடாதொடை பொடியை, வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்தால், நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும். இத்தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 23, 2025
கேரளாவில் அதிகரிக்கும் இளம் தம்பதியர் விவாகரத்து

கேரளாவில் திருமணம் செய்த குறுகிய காலத்திலேயே விவகாரத்து செய்வோரின் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு சுமார் 1.10 லட்சம் திருமணங்கள் பதிவு செய்யப்படும் அதே வேளையில், 30,000 விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதில் பெரும்பாலானோர், ஓராண்டில் திருமணம் செய்தவர்கள் என RTI மூலம் கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.