News September 23, 2025
கருண் நாயருக்கு பதில் தேவ்தத் படிக்கல்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியை, BCCI நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இங்கிலாந்து தொடரில் சொதப்பிய கருண் நாயர் நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. அவருக்கு பதில் மீண்டும் தேவ்தத் படிக்கல் இடம் பிடிப்பார் என தெரிகிறது. காயம் காரணமாக ரிஷப் பண்ட் விலகியுள்ளதால் துருவ் ஜூரேல் லெவனில் இடம் பிடிப்பார். மற்றொரு விக்கெட் கீப்பராக ஜெகதீஸ்சன் இணைய, வேறு மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை.
Similar News
News September 23, 2025
Public Toilet பயன்படுத்தும்போது இத கவனியுங்க

பொது கழிப்பறைகளின் இருக்கையில் அமர்வதால் நோய் தொற்றும் ஏற்படலாம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் அங்குள்ள இருக்கைகளை விட, கதவு கைப்பிடி, பைப், flush, நமது கைகளில் தான் கிருமிகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, இருக்கையை கிருமி நாசினி வைத்து சுத்தம் செய்வது, கைகளை நன்றாகக் கழுவுவதால் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.
News September 23, 2025
Corona செய்தி வெளியிட்டவருக்கு மீண்டும் சிறை

கொரோனா தொடர்பான செய்திகளை பகிர்ந்ததால் சீன பத்திரிகையாளர் ஜாங் ஜான் 2020-ல் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2024 மே மாதத்தில் விடுவிக்கப்பட்ட இவரை, சீனாவின் மதிப்பை குலைத்ததாக கூறி மீண்டும் 2024 ஆகஸ்டில் கைது செய்தது அந்நாட்டு அரசு. இந்நிலையில், மீண்டும் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறன.
News September 23, 2025
Landing Gear-ல் ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவன்!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் ஆப்கன் சிறுவன்(13) மறைந்திருந்தது அதிகாரிகளை அதிர வைத்துள்ளது. விமானத்தின் Landing Gear பகுதியில் மறைந்திருந்த சிறுவன், ஏர்போர்ட்டின் தடைசெய்யப்பட்ட பகுதியில் சுற்றித் திரிந்ததை அடுத்து, பிடிபட்டுள்ளான். ஆர்வ மிகுதியால் இவ்வாறு செய்துவிட்டதாக சிறுவன் கூற, தீவிர விசாரணைக்கு பிறகு, சிறுவன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளான்.